நின்றிருந்த லாரி மீது பஸ் மோதி, சாலையோரம் படுத்திருந்த ஆந்திர ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி

நாமக்கல் அருகே சாலையோரம் படுத்திருந்த ஐயப்ப பக்தர்கள் 2 பேர் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
Updated on
1 min read

நாமக்கல் அருகே சாலையோரம் படுத்திருந்த ஐயப்ப பக்தர்கள் 2 பேர் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

நாமக்கல் அருகே புதுச்சத்திரம் என்ற இடத்தில் லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்தது. அதற்கு முன்புறம் ஆந்திராவில் இருந்து காரில் வந்த ஐயப்ப பக்தர்கள் தங்கள் காரை நிறுத்திவிட்டு, லாரிக்கும் காருக்கும் இடைப்பட்ட சாலைப் பகுதியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை அந்த வழியாக வந்த கர்நாடக பஸ் ஒன்று, வேகமாக லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் லாரி வேகமாக நகன்று முன்புறம் படுத்திருந்த ஐயப்ப பக்தர்கள் மீது மோதியது. இதில், 2 பேர் பலியானார்கள். மேலும் பஸ் டிரைவரும் பலியானார். சிலருக்கு கை- கால் முறிந்து காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com