இரட்டை சூரியன்களை சுற்றி வரும் இரண்டு கோள்கள் கண்டுபிடிப்பு

1 சூரியனைச் சுற்றி வரும் 9 கோள்களைக் கொண்ட நமது பால்வெளி மண்டலம் மட்டுமே இருக்கிறது என்ற நிலை மாறி இதுபோல ஏராளமான கோள்கள் சூரியனை சுற்றி வருவது தற்போது கண்டறியப்பட்டு வருகிறது. அதில் ஒரு முன்னேற்றமாக
இரட்டை சூரியன்களை சுற்றி வரும் இரண்டு கோள்கள் கண்டுபிடிப்பு
Published on
Updated on
1 min read

1 சூரியனைச் சுற்றி வரும் 9 கோள்களைக் கொண்ட நமது பால்வெளி மண்டலம் மட்டுமே இருக்கிறது என்ற நிலை மாறி இதுபோல ஏராளமான கோள்கள் சூரியனை சுற்றி வருவது தற்போது கண்டறியப்பட்டு வருகிறது. அதில் ஒரு முன்னேற்றமாக 2 சூரியன்களைச் சுற்றி வரும் 2 புதிய கோள்கள் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றுக்கு கெப்லர் -34, கெப்லர் 35 என பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்று 2 சூரியன்களைச் சுற்றி வரும் கெப்லர் 16 என்ற கோளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் விண்வெளி, வான்வெளி இயற்பியல் துறை பேராசிரியர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், விண்வெளியில் பல கோள்கள் இரட்டைச் சூரியன்களையே சுற்றி வருவது தெரிய வந்துள்ளதாகவும்,  இரட்டைச் சூரியன் அல்லது இரட்டை நட்சத்திரங்களை அதிகளவில் காண முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்குழுவினர் இரட்டைச் சூரியனை சுற்றி வரும் சிக்னஸ் என்ற மற்றொரு கோளையும் கண்டுபிடித்தனர். இது பூமியை விட 5000 ஒலி ஆண்டுகள் முற்பட்டதாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இவை அனைத்துமே நாசாவின் கெப்லர் செயற்கைக் கோள் மூலமாக கண்டறியப்பட்டதாகும். எனவே, இதன் மூலம் கண்டறியப்பட்ட கோள்களுக்கு அந்த செயற்கைக் கோள் பெயரையே விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

இது குறித்து விஞ்ஞானிகள் குழுவில் இடம்பிடித்துள்ள பேராசிரியர் மசேஹ் கூறுகையில், வான்வெளியில் பல சூரியன்கள் ஜோடியாகவே உள்ளன. ஒன்றாகவே உருவாகி, ஒன்றாகவே உள்ளன. சில சமயங்களில் இரண்டு சூரியன்களுக்கு இடையே ஒரு நட்சத்திரம் வரும் போது சூரியன்களுக்குள் பிளவு ஏற்பட்டு அவை ஒன்றை ஒன்று விலகிச் செல்கின்றன. நமது கோள் மண்டலம்தான் விதிவிலக்காக ஒரு சூரியனைக் கொண்டுள்ளது. ஒரு வேளை ஆராய்ச்சியில், நமது சூரியனிடம் இருந்து விலகிப் போன அதன் ஜோடியைக் கூட கண்டு பிடிக்க முடியும் என்று தோன்றுகிறது.

இதுவரை இரட்டை நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய கண்டுபிடிப்புகளின் மூலம், இரட்டை சூரியன்கள் கூட கோள்களை இயக்குகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சூரியன்கள் இருந்தாலும், இந்த கோள்களிலும் பூமியைப் போன்று இரவு பகல் என்பது உருவாகிறது, ஒரு சூரியன் மறைந்த உடன் மற்றொரு சூரியன் மறைகிறது. அதேப்போல ஒன்றன் பின் ஒன்றாக உதயமாகிறது. இதனால் அந்த கோள்களில் எவ்வித மாறுபாடும் ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களே, உலகம் உருண்டை என்று கண்டுபிடித்து தற்போது இரட்டைச் சூரியன்களை கண்டறியும் வகையில் நமது விண்வெளி ஆராய்ச்சி வளர்ந்துள்ளது. இதில் நீங்களும் பங்கேற்க வேண்டாமா? உங்களுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வமிருந்தால் அது குறித்த படிப்புகளை தேர்வு செய்து படித்து இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள். வாழ்த்துக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com