புதுச்சேரி, பிப். 17: மகாத்மா காந்தி, பாரதியாரை இழிவுபடுத்திய விரிவுரையாளருக்கு பதவி உயர்வு வழங்கும் பணிகள் நடைபெறுவதாகக் கண்டித்து, பாரதியார் பல்கலைக்கூட தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தினர் வரும் பிப்ரவரி 20-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
சங்கத் தலைவர் இராம.மதியழகன், செயலர் பி.வி.பிரபாகரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசைத்துறை துணைப் பேராசிரியராக இருந்த பி.வி.போஸ், மகாத்மாகாந்தி, பாரதியார், பாரதிதாசன் ஆகியோரை இழிவுபடுத்தியும், அவர்களது பாடல்களைப் பாடக்கூடாது என்றும், பாடும் மாணவர்கள் பிச்சைக்காரர்கள் என்றும் கூறியதால், கடந்த 2002ம் ஆண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், அவர் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
விசாரணையில் குற்றம் நிரூபனமானதும், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியான, செயலர் எம்.சத்தியவதி, பி.வி.போஸின் ஊக்க ஊதியம் இரு நிலைகள் குறைக்கப்பட்டு, தண்டன அளித்தார்.
அவர், கல்வித்துறை அமைச்சரிடம் மேல்முறையீடு செய்ததால், எச்சரிக்கைக் கடிதம் கொடுக்கப்பட்டு, மீண்டும் பணியும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பி.வி.போஸ் கடந்த 2010ம் ஆண்டு மீண்டும் தமிழ் இனத்தை இழிவுபடுத்தும் வகையில், மறுபடியும் தேசத் தலைவர்களையும், பாரதியார், பாரதிதாசனையும் இழிவுபடுத்திப் பேசினார். அவர்களது பாடல்களைப் பாடத் தடை விதித்தார்.
இதனால் மீண்டும் 2010 நவம்பர் 29-ம் தேதி செயலர் கண்ணாஜியால் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டும், அப்போது இருந்த அதிகாரிகள் அவருக்கு எவ்வித தண்டனையும் அளிக்காமல், பணியில் சேர்த்துக்கொண்டனர்.
இவ்வாறு தலைவர்களைப் பழித்து, தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட பி.வி.போஸுக்கு, பதவி உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுப்பதைக் கண்டிக்கிறோம்.
மேலும், கடந்த 23 ஆண்டுகளாக காலை நேரத்தில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு பாடப்பட்ட இறைவணக்கப் பாடலை, தற்போது துறைத் தலைவராக இருக்கும் எல்.அன்னபூர்ணா நிறுத்திவிட்டார். இதைக் கண்டித்தும் வரும் 20ம் தேதி தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பில் தொடர் வேலை நிறுத்தத்திலும், உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட இருக்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

