திருப்பூர், பிப்.23: திருப்பூரில் ஆலூக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கொள்ளையர்கள் பெங்காலி மொழி கலந்த ஹிந்தியில் பேசியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேற்குவங்க மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என போலீஸார் சந்தேகப் படுகின்றனர். இதை அடுத்து 400 போலீஸார் கொண்ட 100 குழுவாக அமைத்து, திருப்பூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர். மக்களிடம் இது போன்ற வடமாநில நபர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து வருகின்றனர். இதற்கு முன் அங்கே யாராவது சந்தேகப் படும் வகையில் வந்தார்களா, எங்காவது தங்கியிருந்தார்களா என்று விசாரித்து வருகின்றனர். நகைகள் பெரிய அளவில் கொள்ளையடிக்கப் பட்டிருப்பதால், அவற்றை எடுத்துக் கொண்டு உடனடியாக வெளியிடங்களுக்குத் தப்பித்துச் சென்றிருக்க முடியாது என்பதால், உள்ளூர்ப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.