சென்னை. பிப். 24 : குடிபோதையில் வாகனம் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டு அதனால் மரணம் நிகழ்ந்தால், வாகனம் ஓட்டியவருக்கு அபராதம் விதிப்பதை விட்டுவிட்டு, 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கும் வகையிலான சட்டப்பிரிவின் கீழ் வழக்கைப் பதிவு செய்யுங்கள் என்று உயர் நீதிமன்றம் காவல்துறையினருக்கு பரிந்துரைத்துள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் ஏற்படுத்தினால், அது ஒரு விபத்தாக எடுத்துக் கொண்டு, வெறும் அபராதம் விதிக்கக் கூடாது. இது ஒருவர் மீது தொடரப்படும் வழக்கு அல்ல. குடிபோதையில் வாகனம் ஓட்டும் சமூகத்தின் மீது செய்யப்படும் வழக்காக எடுத்துக் கொண்டு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (2)ன் கீழ் வழக்குப் பதிவு செய்து அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுத் தாருங்கள் என்று காவல்துறைக்கு நீதிபதி கூறியுள்ளார்.
304 (2) சட்டம் சொல்வது என்ன : மரணம் உண்டாக்க வேண்டும் என்கிற நோக்கம் இல்லாமல், விளைவிக்கப்படும் உடல் காயத்தால் மரணம் நேரிடக் கூடும் என தெரிந்து, ஒருவர் செய்த காரியத்தால் மரணம் நடந்தால், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ சேர்த்து விதிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.