பண்ருட்டியில் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
பண்ருட்டி, ஜன.20: புயல் நிவாரணம் சரியாக வழங்கப்படாததால் அங்கங்கே மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதும் அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவதும் நடந்து வருகிறது. பண்ருட்டியில் தங்களுக்கு புயல் நிவாரணம் வழங்கப்பட


பண்ருட்டி, ஜன.20: புயல் நிவாரணம் சரியாக வழங்கப்படாததால் அங்கங்கே மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதும் அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவதும் நடந்து வருகிறது.
பண்ருட்டியில் தங்களுக்கு புயல் நிவாரணம் வழங்கப்பட வில்லை எனக்கூறி, பொதுமக்கள் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையில் ஈடுபட்டனர். கீழ்மாம்பட்டு, கீழ்காங்கேயம்குப்பம், குடியிருப்பு பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டும் எவ்வித பதிலும் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்து, சென்னை கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சிதம்பரம் காவல் கண்காணிப்பாளர் அங்கே வந்து மக்களை சமாதானப்படுத்தினார். இதனை அடுத்து மீண்டும் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விரைவில் அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என்று வட்டாட்சியர் கூறியதை அடுத்து கலைந்து சென்றனர். இதனால், சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...