மதுரையில் காவலில் இருந்து சிறுவர்கள் தப்பியோட்டம்

மதுரை, ஜன.21: மதுரையில் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் (சிறார் சிறை) இருந்து சமையல்காரரைத் தள்ளிவிட்டு 16 சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது. இரவு சுமார் 8.30மணி
Updated on
1 min read

மதுரை, ஜன.21: மதுரையில் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் (சிறார் சிறை) இருந்து சமையல்காரரைத் தள்ளிவிட்டு 16 சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது. இரவு சுமார் 8.30மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து, அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை காமராஜர் சாலையில் உள்ள சிறுவர் சீர்திருத்த கூர்நோக்கு இல்லத்தில் மொத்தம் 18 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காவலாக இரவு நேரக் காவலரும் சமையல்காரருமான மகாபுலியன் (39)  என்பவர் இருந்துள்ளார். இரவு உணவு கொடுத்து முடித்த பிறகு, டி.வி.யைப் போட்டு அனைவரையும் பார்க்கச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். இந்த நேரத்தில் சுந்தர் என்ற சிறுவன் சிறுநீர் கழிக்க வெளியே செல்ல வேண்டும் என்று கூறி எழுந்துசென்றுள்ளான். திரும்பி வந்தபோது, கையில் வைத்திருந்த மிளகாய்ப் பொடியை மகாபுலியன் மீது தூவி தாக்கி காயப்படுத்தியுள்ளான். இதைத் தொடர்ந்து அங்கே குழுமிய பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மகாபுலியனை இழுத்துச் சென்று அடித்து துவம்சம் செய்து காயப்படுத்தியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்களில் 16 சிறுவர்கள் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓடினர். 2 சிறுவர்கள் மட்டும் அங்கேயே இருந்துவிட்டனர்.

உடனே நடவடிக்கையில் இறங்கிய போலீஸார் தப்பியோடியவர்களில் 8 பேரை  சுற்றி வளைத்தது. மற்றவர்களையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

முதலில் தாக்கிய சிறுவன் சுந்தர், ராஜபாளையத்தைச் சேர்ந்தவன் என்றும், எம்.எல்.ஏ கொலைமுயற்சி வழக்கில் அடைக்கப்பட்டவன் என்றும் போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com