பொள்ளாச்சி, ஜூலை 20: பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி என்ற இடத்தில் பாலத்தின் அருகே இன்று காலை சந்தேகத்துக்கு இடமான வகையில், கேரள மாநில பதிவு கொண்ட சரக்கு வேன் ஒன்று நின்றிருந்தது. அதில் இருந்து கழிவுகள் அருகே கொட்டப்பட்டிருந்துள்ளது. உள்ளூர் விவசாயி ஒருவர் சந்தேகப்பட்டு விசாரித்த போது, கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் இருந்து வந்த வேன் என்றும், கழிவுகளைக் கொட்டுவதற்காக வந்ததாகத் தெரிய வந்ததை அடுத்து, போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வேன் ஓட்டுநரைக் கைது செய்து வேனைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.