மதுரையில் பல்பொருள் அங்காடியில் திருட்டு: ஊழியர்கள் 3 பேர் கைது

மதுரை, ஜூன் 13: மதுரையில் பரபரப்பான பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ரூ. 5 லட்சம் திருடப்பட்டது. இதை அடுத்து போலீஸில் புகார் கூறப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் அருகில் இருந்தவர்கள், சந்தேகப்படும
Updated on
1 min read

மதுரை, ஜூன் 13: மதுரையில் பரபரப்பான பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ரூ. 5 லட்சம் திருடப்பட்டது. இதை அடுத்து போலீஸில் புகார் கூறப்பட்டது.

புகாரின் பேரில் போலீஸார் அருகில் இருந்தவர்கள், சந்தேகப்படும் நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இறுதியில் அந்த பல்பொருள் அங்காடி ஒன்றில் பணிபுரிந்த ஊழியர்கள் சிலரிடம் சந்தேகம் எழுந்தது,. இதை அடுத்து ஊழியர்கள் 3 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து பணமும் உடனடியாக மீட்கப்பட்டது.

நகரின் மையப் பகுதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதால் மதுரையில் காலையிலேயே பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com