நாமக்கல், ஜூன் 25: நாமக்கல் அருகே பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் அருகே வடுகப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கே பயின்றுவரும் மாணவிகளிடம் பள்ளி ஆசிரியர் சத்யபிரபு (34) தகாத முறையில் நடந்துகொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதை அடுத்து, பள்ளியை நூற்றுக்காணக்கான பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த உதவி கல்வி அலுவலர் பள்ளி ஆசிரியரை உடனே பணியிடைநீக்கம் செய்தார்.
மேலும், போலீஸார் பள்ளிக்கு விரைந்தனர். ஆசிரியரை பாதுகாப்பாக வெளியே கொண்டு செல்ல போலீஸார் முயன்றனர். ஆனால், பொதுமக்கள் திரண்டு நின்று கோஷம் எழுப்பி வருவதால், போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.