கல்வீச்சில் மதுரை தினமணி அலுவலக கண்ணாடிகள் சேதம்

மதுரையில், பசும்பொன் தேவர் குருபூஜைக்குச் சென்று திரும்பியவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,
Updated on
1 min read

மதுரையில், பசும்பொன் தேவர் குருபூஜைக்குச் சென்று திரும்பியவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புளியங்குளத்தைச் சேர்ந்த சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.

மதுரை விரகனூர் சுற்றுச் சாலை வழியாக கண்ணில் பட்ட கட்டடங்களின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தினர். அதில், ஞாயிறு மாலை 4 மணி அளவில் தினமணி- தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் குழும அலுவலக கட்டடமும் தாக்குதலுக்கு உள்ளானது. முகப்பு கண்ணாடிகள், அறை வாசல் கண்ணாடிகள், ஜன்னல்கள் ஆகியவை இந்தக் கல்வீச்சில் சேதம் அடைந்தன.

இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com