பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட தீயணைப்புப் படையினர் அறிவுரை

பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடுவது குறித்து நாமக்கல் மாவட்ட தீயணைப்புப் படை வீரர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Updated on
1 min read

பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடுவது குறித்து நாமக்கல் மாவட்ட தீயணைப்புப் படை வீரர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுதொடர்பாக நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜபாண்டியன் தலைமையில் வீரர்கள் நாமக்கல் நகர் முழுவதும் தீயணைப்பு வாகனத்தில் சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகித்தனர். அவற்றில், விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடிட, ராக்கெட் போன்ற வாண வெடிகளை குடிசை வீடுகளில் இருந்து தள்ளி வெடிக்க வேண்டும். பட்டாசுகளை, பெரியவர்களின் முன்னிலையில், பாதுகாப்புடன் கொளுத்திட வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, ஒரு வாளி நீர் எப்போதும் பக்கத்தில் பாதுகாப்புக்காக வைத்திருக்கவும், பட்டாசுகளை பக்கவாட்டில் நின்று கொளுத்தவும் வேண்டும். கொளுத்தியவுடன் பின் வேகமாகத் தள்ளிச் செல்லவும், நீண்ட வத்திகளைக் கொண்டு பட்டாசு வெடிக்கச் செய்யவும் வேண்டும். பட்டாசு கொளுத்தும் போது இறுக்கமான ஆடை அணியவும், முடிந்தவரை பருத்தி ஆடை அணிவதும் நல்லது.

குழந்தைகள் சட்டப்பையில் பட்டாசுகளை வைக்க அனுமதிகக் கூடாது. பட்டாசு வெடிகளுக்கு அருகில் எரியும் ஊதுவத்தி, விளக்கு, மெழுகுவர்த்தியை வைக்கக் கூடாது. பட்டாசு வெடித்தபோது தீக்காயம் ஏற்பட்டால், தீப்புண்ணை உடனடியாக சுத்தமான தண்ணீர் ஊற்றி குளிர வைக்க வேண்டும். மேலும், தீக்காயத்தை அழுத்தி துடைக்கக் கூடாது. தீப்புண்ணில் எண்ணெய், ஆயின்மெண்ட், இங்க் போன்றவற்றை பயன்படுத்தவும் வேண்டாம். தீப்புண்ணின் ஒட்டி உள்ள ஆடைகளை அகற்றாமல் உடனடியாக மருத்துவரை அணுகிட வேண்டும்.

ஆடையில் தீப்பிற்றினால் உடனடியாக ஓடக்கூடாது. தண்ணீர் ஊற்றியோ, தரையில் படுத்து உருண்டோ அல்லது போர்வையால் மூடியோ தீயை அணைக்கலாம். மேலும், தீபாவளி பண்டிகையின்போது தீ விபத்து ஏற்பட்டால் உடனடி யாக 101 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com