சக்ர ஸ்நானத்துடன் நிறைவு பெற்றது திருப்பதி நவராத்திரி பிரமேற்ஸவம்

திருமலை நவராத்திரி பிரம்மோத்ஸவத்தில் நேற்று திங்கள் இரவு குதிரை வாகனத்தின் பெருமாள் மாட வீதிகளில் வலம் வந்தார். கடைசி நாளான இன்று செவ்வாய்க்கிழமை காலை தீர்த்த வாரி நடைபெற்றது. இந்த நவராத்திரி பிரம்மோற்ஸவம் இன்று சக்ர ஸ்நானத்துடன் நிறைவடைந்தது. அப்போது, கோயில் குளத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
Updated on
1 min read

நவராத்திரி பிரம்மோற்ஸவத்தில் 9 நாள் உண்டியல் வருமானம் ரூ.12,93,51,000 என்று திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்தார்.

திருமலை அன்னமய்ய பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செயல் அதிகாரி செய்தியாளர்களிடம் பேசினார்.

திருப்பதி நவராத்திரி பிரமோத்ஸவம் இடையூறு ஏதும் இன்றி நடைபெற்றது. இதற்காக அனைத்துத் துறை சார்ந்தவர்களும் ஒத்துழைத்தனர். அதர்காக அனைவருக்கும் நன்றி. 2010ம் ஆண்டு நடைபெற்ற ந்வராத்திரி பிரம்மோத்ஸவத்துக்கும் இப்போது நடந்து முடிந்த பிரமோத்ஸவத்துக்கு வேறுபாடு உள்ளது.

இந்த 9 நாள் உண்டியல் வருமானம் ரூ.12,93,51,000. லட்டுகள் 17,20,532 விற்பனை ஆகின. ஏழுமலையானை தரிசிக்க வந்தவர்கள் 4,74,888 பேர். நடைபாதையாக வந்தவர்கள் 1,41,515 பேர். ஆந்திர மாநில போக்குவரத்து மூலம் 7,68,718 பேர் பயணித்துள்ளனர். 2,34,515 பேர் முடி காணிகை செலுத்தியுள்ளனர்.

இந்த முறை நவராத்திரி பிரமோத்ஸவத்துக்கு வெளிநாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இத்தாலி, ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பலர் தர்ம தரிசன வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர் என்றார் அவர்.

முன்னதாக, திருமலை நவராத்திரி பிரம்மோத்ஸவத்தில் நேற்று திங்கள் இரவு குதிரை வாகனத்தின் பெருமாள் மாட வீதிகளில் வலம் வந்தார். கடைசி நாளான இன்று செவ்வாய்க்கிழமை காலை தீர்த்த வாரி நடைபெற்றது. இந்த நவராத்திரி பிரம்மோற்ஸவம் இன்று சக்ர ஸ்நானத்துடன் நிறைவடைந்தது. அப்போது, கோயில் குளத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com