டெங்குவைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம்: அன்சுல் மிஸ்ரா

மதுரை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
டெங்குவைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம்: அன்சுல் மிஸ்ரா
Updated on
1 min read

மதுரை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பிரசவ வார்டு, குழநதைகள் நலப்பிரிவு உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் டெங்கு நோய் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனைகளில், டெங்கு நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதற்கான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி 71 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். அவர்களில் சிகிச்சை முடிந்து 26 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தற்போது 45 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு பாதிப்பை தடுப்பதில் பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம். மேலூர் பகுதியில் பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டியது அவசியம்.

மதுரை அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசு 76 லட்சம் சிறப்பு நிதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

வேறு வித வைரஸ் காய்ச்சல் கண்டு உயிரிழப்பு நேர்ந்தால், அதையும் டெங்கு காய்ச்சலால்தான் என்று வதந்தி பரப்பப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாகச் செயல்பட வேண்டியுள்ளது. மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை மறைக்கவில்லை. வெளிப்படையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல் பாதிப்புடன் வரும்அனைவருக்குமே தேவைப்பட்டால் டெங்கு நோய் குறித்து அறிந்து கொள்ளும் பரிசோதனை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளுக்கு தற்போது சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் டெங்கு நோயாளிகள் பலரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட உரிய நேரத்தில சிகிச்சை பெறுவது அவசியம். இதனை பொதுமக்கள்உணர்ந்து செயல்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com