மதுரை அருகே காரில் வந்தவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 16 பேர் காயம்

மதுரை அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு சென்றுவிட்டுத் திரும்பிய ஒரு கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கினர். இதில் 16 பேர் படுகாயமடைந்தனர்.
Updated on
1 min read

மதுரை அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு சென்றுவிட்டுத் திரும்பிய ஒரு கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கினர். இதில் 16 பேர் படுகாயமடைந்தனர்.

மதுரை அடுத்த சிலைமான் புளியங்குளத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் டாடா சுமோ காரில் பசும்பொன் சென்றுவிட்டு அருப்புக்கோட்டை வழியாக மதுரை திரும்பினர். அவர்கள், மதுரை திருமங்கலம் புறவழிச்சாலை வழியாக திரும்பிக் கொண்டிருந்தபோது, மதுரை விரகனூர் சுற்றுச்சாலை பகுதியில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் காரை வழிமறித்து பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் 16 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை புறநகர் எஸ்.ஐ., இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com