காவிரி ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி

நாமக்கல், செப்.21: நாமக்கல் அருகே பள்ளிப்பாளையம் பகுதி மற்றும் ஏடர்பாளையம் பகுதிகளில், விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.  பள்ளிப்பாளையம் பகுதியில் மாலை
Updated on
1 min read
நாமக்கல், செப்.21: நாமக்கல் அருகே பள்ளிப்பாளையம் பகுதி மற்றும் ஏடர்பாளையம் பகுதிகளில், விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 
பள்ளிப்பாளையம் பகுதியில் மாலை 6 மணி அளவில் விநாயகர் சிலைகளுடன் பலர் ஊர்வலமாகச்சென்றனர். சிலைகளை ஆற்றில் கரைக்க முயன்றபோது, ஆற்றில் நீர் அதிகமாக இருந்ததால், நீரில் மூழ்கி 2பேர் உயிரிழந்துள்ளனர். 
அடுத்து, மாலை 4 மணி அளவில் ஏடர்பாளைய அணைக்கு விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற சுரேஷ்குமார், சிவசங்கர் என்ற இருவர் நீரில் மூழ்கினர். இவர்களது உடல்களை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com