கடலுக்கு எல்லை பிரிப்பதை எதிர்த்து நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம்
By ஷங்கர் | Published On : 29th December 2012 02:03 PM | Last Updated : 29th December 2012 02:03 PM | அ+அ அ- |

நாகை வட்ட மீனவ கிராம மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
இன்று காலை நாகை வட்ட மீனவ பஞ்சாயத்தார் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கடலுக்கு எல்லை வகுத்து மீன்பிடி தொழிலை முடக்கக் கூடாது. மீன் பிடிக்கும் அனைத்து இடங்களிலும் மீனவர்களுக்கு உரிமை உள்ளது.
தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினரின் அத்துமீறும் செயலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காணும் வரை தொடர் வேலை நிறுத்தம் இன்று முதல் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
நாகை வட்ட மீனவக் கிராமங்களில் 8 கிராமங்கள் அடக்கம். சுமார் 600க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 2000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.