கிளிநொச்சி உதயன், சுடர்ஒளி பத்திரிகை அலுவலகங்கள் மீது சிங்களர்கள் தாக்குதல்: வைகோ கண்டனம்

இலங்கை கிளிநொச்சியில் உதயன், சுடர் ஒளி ஆகிய பத்திரிகை அலுவலகங்கள் மீது சிங்கள குண்டர் படை தாக்குதல் நடத்தியதற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on
Updated on
1 min read

இலங்கை கிளிநொச்சியில் உதயன், சுடர் ஒளி ஆகிய பத்திரிகை அலுவலகங்கள் மீது சிங்கள குண்டர் படை தாக்குதல் நடத்தியதற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 

சிங்கள இனவாத அரசு செய்த தமிழ் இனப் படுகொலைகளை ஜெனீவாவில் அம்பலப்படுத்தியதற்காக, கிளிநொச்சியில் உள்ள உதயன், சுடர் ஒளி பத்திரிகை அலுவலகங்களை சிங்கள குண்டர்கள் தாக்கி உள்ளனர். இதில் இரண்டு பத்திரிகை ஊழியர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். அங்கு இருந்த சிங்கள இராணுவத்தின் முன்னிலையிலேயே தாக்குதல் நடந்து உள்ளது.

அப்பத்திரிகையாளர்களின் உயிருக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. ஹிட்லரின் நாஜிகள் நடத்திய கொலைவெறித் தாண்டவத்தை, ராஜபக்சேவின் கூட்டம், தமிழ் ஈழத்தில் தொடர்ந்து நடத்தி வருவதன் கோர முகத்தை உலக நாடுகளும், ஐ.நா. மன்றமும் உணர்ந்து, சிங்கள இராணுவத்தையும், சிங்களர்களையும் ஈழத் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, ஈழத் தமிழர்களை தொடரும் இனக்கொலை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

- இவ்வாறு கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com