சமையல் செய்த போது ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த பெண் இறந்தார்.
கும்பகோணம் மாதுளம்பேட்டை வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். கூலித் தொழிலாளி. இவருக்கும் ரஞ்சிதா (20) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் ரஞ்சிதா கடந்த 3ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது அருகிலிருந்த மண்ணெண்ணை பாட்டில் அடுப்பு மீது விழுந்ததில் ஏற்பட்ட தீயில் ரஞ்சிதா தீக்காயம் அடைந்தார். கவலைக்கிடமான நிலையில் அவர் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தார்.
இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி ஒராண்டுக்குள் ரஞ்சிதா இறந்ததால் வரதட்சிணை காரமணமாக இறந்திருக்கலாமா என ஆர்டிஓ சங்கரநாராயணன் மேல் விசாரணை நடத்தி வருகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.