திருநெல்வேலி மாவட்டம்,கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழி திருமலைக்கோவிலில் சித்திரை விஷூவையொட்டி அன்றைய தினம் லட்சார்ச்சனை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
விஷூவை முன்னி்ட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.தொடர்ந்து கணபதி ஹோமம்,லெட்சுமி ஹோமம் நடைபெறுகிறது.மதியம் ருத்ர ஏகாதசி ஹோமமும்,தொடர்ந்து மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.பின்னர் சித்திரை விஷூ புண்யகால தீர்த்தவாரியும்,இரவில் வெள்ளி வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.
காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுவதுடன், மதியம் 12 மணியளவில் லட்சார்ச்சனை தொடங்குகிறது.தொடர்ந்து 3 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் பழனிக்குமார்,உதவி ஆணையர் கார்த்திக்,தேர் திருப்பணிக்குழுத் தலைவர் அருணாசலம் செட்டியார்,துரைப்பட்டர்,ரமேஷ்பட்டர்,ஹரிபட்டர் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.