புவனேசுவரம் விமான நிலையத்துக்கு முதல் பரிசு

விமானப் பயணிகளுக்கு மிகச் சிறந்த சேவையை அளித்துள்ளதற்காக புவனேசுவரம் பிஜு பட்நாயக் விமான நிலையம் நாட்டிலேயே மிகச் சிறந்த விமான நிலையமாகத் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்று விமான நிலைய வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
Updated on
1 min read

கடந்த 2012-13-ம் ஆண்டில் கணக்கெடுக்கப்பட்ட நுகர்வோர் மனநிறைவு குறியீட்டின் அடிப்படையில் பிஜு பட்நாயக் விமான நிலையம் முதல் பரிசை ஜோத்பூர் விமான நிலையத்துடன் பகிர்ந்து கொள்கிறது.

கடந்த இரு ஆண்டுகளாக விமானப் பயணிகளுக்கு மிக திருப்தியான முறையில் சேவையை அளித்ததற்காக மிக உயர்ந்த குறியீட்டு எண்ணை பிஜு பட்நாயக் விமான நிலையம் எட்டியுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com