92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வீராணம் ஏரி மண்ணை மக்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க முதல்வருக்கு உழவர் முன்னணி கோரிக்கை

வீராணம்ஏரியை தூர்வாரும் போது, ஏரியின் வண்டல் மண்ணை அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் எடுத்துச் செல்ல தமிழகஅரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழக உழவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2013, 4:12 pm

ஜி.சுந்தரராஜன்

வீராணம்ஏரியை தூர்வாரும் போது, ஏரியின் வண்டல் மண்ணை அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் எடுத்துச் செல்ல தமிழகஅரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழக உழவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டத் தலைவர் அ.கோ.சிவராமன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரியை ரூ.40 கோடி செலவில் தூர்வாரப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ள அறிவிப்பை தமிழக உழவர் முன்னணி வரவேற்கிறது. அவ்வாறு தூர்வாரத் தொடங்கும் போது ஏரியில் உள்ள மண்ணை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்ல தமிழகஅரசு அனுமதி வழங்க வேண்டும் என கோருகிறோம். மண் எடுத்துச் செல்ல அனுமதித்தால் வீராணம்ஏரி விரைந்து ஆழப்படுத்தப்படும் என்பதோடு, தமிழகஅரசுக்கு பணிச்சுமையும், பணச்சுமையும் குறையும். வீராணம்ஏரி பாசன விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று செயல்படுத்த முன்வந்திருக்கும் தமிழக முதல்வர் இக்கோரிக்கையையும் ஏற்று இக்கோடைக் காலத்திற்குள் ஏரியை ஆழப்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என அ.கோ.சிவராமன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.