மதுரையில் கைதான கிச்சான் புகாரி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்

பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதாகக் கூறி நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த கிச்சான் புகாரி (50) பெங்களூரு தனிப்படை போலிஸாரால் இன்று காலை மதுரையில் கைது செய்யப்பட்டார்.
Updated on
1 min read

பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதாகக் கூறி நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த கிச்சான் புகாரி (50) பெங்களூரு தனிப்படை போலிஸாரால் இன்று காலை மதுரையில் கைது செய்யப்பட்டார்.

நெல்லையைச் சேர்ந்த கிச்சான் புகாரி கொலை வழக்கு ஒன்றில் தண்டனை பெற்றவர் என்றும், தண்டனைக் காலம் முடிந்த நிலையில், அவர் கோவையில் குடியேறி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும், சிறுபான்மையினர் பிரிவு என்ற அமைப்பை உருவாக்கி அதன் முக்கிய நிர்வாகியாக இருப்பதாகவும் போலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கிச்சான் புகாரிக்கு மதுரையில் அடைக்கலம் தந்தவர்கள் குறித்தும் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்த நிலையில், இதில் மதுரையைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஏற்கனவே மதுரையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com