மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று காலை நான்கு மாசி வீதிகளிலும் தேர் வலம் வருகிறது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். சிறிது தொலைவு வந்தவுடன் ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாக தேர் தடைப்பட்டது. இதனால் தேரோட்டத்தில் தாமதம் ஏற்பட்டது.
இன்று அதிகாலை 5 மணி அளவில் கள்ளழகர் மதுரை நகர் வந்தடைந்தார். அவருக்கு எதிர்சேவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.