சோழவந்தான் வைகை ஆற்றில் பள்ளி மாணவி மூழ்கிச் சாவு

சோழவந்தானைச் சேர்ந்தவர் மார்க்கண்டேயன். இவரது மனைவி சப்பாணியம்மாள். இவர் சோழவந்தான் பேரூராட்சி உறுப்பினர். இவரது மகள் முனீஸ்வரி (12).அப்பகுதி அரசுப் பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவி. இவர் தமது
Updated on
1 min read

மதுரை மாவட்டம் சோழவந்தானில் வைகை ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவி உயிரிழந்தார். மேலும் ஒருவர் குளிக்கச்சென்று காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.

சோழவந்தானைச் சேர்ந்தவர் மார்க்கண்டேயன். இவரது மனைவி சப்பாணியம்மாள். இவர் சோழவந்தான் பேரூராட்சி உறுப்பினர். இவரது மகள் முனீஸ்வரி (12).அப்பகுதி அரசுப் பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவி. இவர் தமது சகோதரியுடன் வைகை ஆற்றுக்கு குளிக்கச்சென்றுள்ளார். ஆழமான பகுதிக்கு சென்ற முனீஸ்வரி நீரில் மூழ்கியுள்ளார். அப்போது நீர் ஓடியதால் அதில் மாணவி அடித்துச்செல்லப்பட்டார்.மாணவி நீரில் அடித்துச்செல்லப்பட்டதை அறிந்த அவரது சகோதரி ஊருக்கு சென்று தெரிவித்தார். தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மாணவியைத் தேடினர். ஆனால், முனீஸ்வரி இறந்த நிலையில் சடலத்தை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

பிரேத பரிசோதனைக்காக மாணவி சடலம் சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com