92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அண்ணாமலை பல்கலை. பதிவாளராக (பொறுப்பு) பேராசிரியர் என்.பஞ்சநதம் பதவிஏற்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக (பொறுப்பு) நியமனம் செய்யப்பட்டுள்ள பேராசிரியர் என்.பஞ்சநதம் வியாழக்கிழமை பதவிஏற்றார்.

News image
Updated On :25 ஏப்ரல் 2013, 10:20 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக (பொறுப்பு) நியமனம் செய்யப்பட்டுள்ள பேராசிரியர் என்.பஞ்சநதம் வியாழக்கிழமை பதவிஏற்றார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத்துறை தலைவராக பணியாற்றி வந்தவர். ரோட்டரி சங்க துணை கவர்னராகவும் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது.

இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனாவை கடந்த ஏப்.4-ம் தேதி தமிழகஅரசு நியமனம் செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார். அவருக்கு உதவியாக மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பில் தஞ்சை குறுங்குளம் சர்க்கரை ஆலை முதன்மை நிர்வாக அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி கிருஸ்துராஜ் ஆகிய இருவரை தமிழகஅரசு நியமனம் செய்தது. இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதனை பணி இடைநீக்கம் செய்து தமிழக ஆளுநர் கே.ரோசைய்யா ஏப்.6-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் தமிழகஅரசு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்தும், பல்கலைக்கழகத்திற்கு இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்தது. இதனையடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளராக பதவி வகித்து வந்த ஆர்.மீனாட்சிசுந்தரத்திற்கு வயது 58 முடிவுற்றதால் அவரை ஏப்.15-ம் தேதி பதிவாளர் பதவியிலிருந்து விடுவித்து, வணிகவியல் துறை பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டார். பதிவாளராக இருந்த ஆர்.மீனாட்சிசுந்தரம் ஏப்.16-ம் தேதி பல்கலைக்கழக வணிகவியல்துறை பேராசிரியராக பொறுப்பேற்றார். இந்நிலையில்  பதிவாளர் (பொறுப்பு) பதவிக்கு பல்கலைக்கழக மேலாண்மைத்துறை தலைவராக இருந்த பேராசிரியர் என்.பஞ்சநதம் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.