அனுமதியின்றி மணல் அள்ளியதாக ஒருவர் கைது

சின்னமனூர் அருகே ஓடையில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றதாக ஒருவரை வியாழக்கிழமை சின்னமனூர் காவல் நிலைய போலீஸôர் கைது செய்தனர்.
Updated on
1 min read

சின்னமனூர் அருகே ஓடையில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றதாக ஒருவரை வியாழக்கிழமை சின்னமனூர் காவல் நிலைய போலீஸôர் கைது செய்தனர்.

      உ.அம்மாபட்டியைச் சேர்ந்த சிவனாண்டி மகன் ஈஸ்வரன்(45). இவர், புலிகுத்தி அருகே சாலமலைக் கரடு காட்டாற்று ஓடையில் இருந்து டிராக்டர் மூலம் மணல் அள்ளிச் சென்று கொண்டிருந்தாராம். ஓடையில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றதாக ஈஸ்வரனை, சின்னமனூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சேதுராமன் கைது செய்தார். டிராக்டர் உரிமையாளர் உ.அம்மாபட்டியைச் சேர்ந்த பரமத்தேவர் மகன் மாறன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு, உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com