மொரப்பூர் அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட இரும்பு தளவாடப் பொருள்களை திருடியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அரூர் வட்டம், தாசரஹள்ளி-தொங்கனூர் சாலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நடைபெறுகிறது. இவ்வூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது.
தொட்டிகள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு தளவாடப் பொருள்கள், இரும்பு சல்லடைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து தனியார் நிறுவன மேற்பார்வையாளர் ஆர்.ராஜாராம் (38) அளித்த புகாரின் பேரில், அரூர் வட்டம், பத்தலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் தம்பிதுரை (24), அமராவதி மகன் மாதேஷ் (25) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான இரும்பு தளவாடப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.