கடன் வாங்கிவிட்டு தராத 2 பேர் மீது வழக்குப் பதிவு

தொழில் மேம்பாட்டுக்கு என கடன் வாங்கிவிட்டு திருப்பித்தராமல் ஏமாற்றியதாக எழுந்த புகாரின்பேரில் 2 பேர் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.
Updated on
1 min read

தொழில் மேம்பாட்டுக்கு என கடன் வாங்கிவிட்டு திருப்பித்தராமல் ஏமாற்றியதாக எழுந்த புகாரின்பேரில் 2 பேர் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.

    மதுரை தெற்குவெளிவீதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (54). இவரிடம் கோவையைச் சேர்ந்த சந்திரமோகன், கதிர்வேல் ஆகியோர் கடன் கேட்டுள்ளனர். இருவரும் சி.டி. மற்றும் டி.வி.டி. விற்பனைத் தொழில் செய்வதாகவும், அதை மேம்படுத்துவதற்காக கடன்வேண்டும் எனக்கோரி சில ஆவணங்களையும் தந்துள்ளனர்.

  அதனடிப்படையில் ரூ.7 லட்சத்தை கடனாக ஜெயப்பிரகாஷ் கடந்த 2012-ல் வழங்கியுள்ளார். ஆனால், ஆவணங்கள் போலி எனத்தெரியவந்துள்ளது. இதையடுத்து கடனை திருப்பிக் கேட்டபோது சந்திரமோகன் தரப்பினர் தராமல் காலங்கடத்திவந்ததாகக் கூறப்படுகிறது.

  இதையடுத்து ஜெயப்பிரகாஷ் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்படி சந்திரமோகன், கதிர்வேல் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com