அனுமதியின்றி கரிமருந்து திரி தயாரித்ததாக 3 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலிநாயக்கனூர், சங்கரலிங்காபுரம், முத்துலிங்காபுரம், கன்னிசேரி, முதலிபட்டி, சித்தமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெடி விபத்துக்களை ஏற்படுத்தும் வெடிபொருள்கள்
Updated on
1 min read

விருதுநகர் அருகே வீடுகளில் அனுமதியின்றி கரிமருந்து திரிகளை தயாரித்ததாக வச்சக்காரப்பட்டி போலீஸார் 3 பேர் மீது வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலிநாயக்கனூர், சங்கரலிங்காபுரம், முத்துலிங்காபுரம், கன்னிசேரி, முதலிபட்டி, சித்தமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெடி விபத்துக்களை ஏற்படுத்தும் வெடிபொருள்கள் வீடுகளில், மாட்டு கொட்டகைகளில் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து உயர்நிலை கண்காணிப்பு குழுவினர் பல்வேறு பகுதிகளாக பிரிந்து தீவிரமாக சோதனையிட்டனர்.அதில் ஒரு பகுதியினருக்கு ஒண்டிப்புலிநாயக்கனூர் பகுதியில் மாட்டுக் கொட்டைகையில் வைத்து கருமருந்தி திரிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ரகசிய தகவல் வந்தது.

அதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற கண்காணிப்பு குழுவினர் வீட்டிற்கு முன்புறம் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது, பின்புறமாக இருந்த கொட்டகையில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் தப்பியோடினார்கள். பின்னர் இது தொடர்பாக அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை செய்ததில் இக்கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி(35), மாரியப்பன்(45) மற்றும் முருகேசன்(36) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து மூன்று பேரும் வழக்கு பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com