கம்பி நிறுவனத்தில் திருட்டு: 4 பேர் கைது

மதுரையில் கம்பி நிறுவனத்தில் நடந்த திருட்டு வழக்கில் காசாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பணம், ஆட்டோக்கள், சரக்கு லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.   ஆத்திகுளத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கரிமேடு மார்க்கெட் பகுதியில் கம்பி நிறுவ
Updated on
1 min read

மதுரையில் கம்பி நிறுவனத்தில் நடந்த திருட்டு வழக்கில் காசாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பணம், ஆட்டோக்கள், சரக்கு லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

   ஆத்திகுளத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கரிமேடு மார்க்கெட் பகுதியில் கம்பி நிறுவனம் நடத்திவருகிறார். இவரது கடையானது சில நாள்களுக்கு முன்பு திறந்திகிடந்துள்ளது. மேலும் நிறுவனத்திலிருந்த 55 டன் கம்பிகள் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.

  கடைமேலாளர் ராஜேஷ் அளித்த புகாரின்பேரில் கரிமேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராஜ் தலைமையில் விசாரணை நடந்தது. அதில் கடை காசாளர் எம்.கே.புரம் கணேஷ்பாபு மற்றும் ஏற்கெனவே கடையில் பணிபுரிந்து ஆட்டோ டிரைவராக உள்ள காதக்கிணறு செந்தூர் பாண்டி மற்றும் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம், லோடுமேன் பாண்டி உள்ளிட்ட 8 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

  கணேஷ்பாபு உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ.4.80 லட்சம் மதிப்புடைய கம்பிகள், சரக்கு லாரி மற்றும் 4 ஆட்டோக்களையும், கணேஷ்பாபுவிடமிருந்து ரூ.1.09 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

 கம்பி திருடி விற்றதில் செந்தூர்பாண்டி 1 ஆட்டோவும், பாண்டி 3 ஆட்டோக்களும் வாங்கியுள்ளனர். கணேஷ்பாபு கடனை அடைத்துள்ளார். கம்பியை சரக்குலாரியில் ஆறுமுகவேல் ஏற்றிச்சென்றுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர். மேலும் 4 பேரை தேடிவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com