காலிங்கராயன் அணைக்கட்டில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம்


காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையம் அணைக்கட்டில் இருந்து காலிங்கராயன் கால்வாயில் முதல் போக பாசனத்துக்கான தண்ணீரை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம், வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பால்வளம் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி ஆகியோர் திறந்துவைத்தனர்.
பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் இராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியது:
காலிங்கராயன் கால்வாய் முதல்போக பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது வினாடிக்கு 200 கன அடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளது. இது படிப்படியாக 584 கன அடியாக அதிகரிக்கப்படும்.
ஜன.8-ம் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் விடப்படும். இதன் மூலம் 15,743 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நல்ல மகசூலை பெற வேண்டும்.
காலிங்கராயன் வாய்க்காலில் சுமார் ரூ.50 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் இப்போது முடிவடைந்துள்ளது. மாசுநீர், தொழில்சாலை கழிவு நீர் கலக்காமல் இருப்பதற்கு 10 கிலோமீட்டர் நீளத்துக்கு பேபி வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. 2013-14 ம் நிதியாண்டில் காலிங்கராயன் வாய்க்காலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.கணேஷ், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆர்.என்.கிட்டுசாமி, ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் தலைவர் பி.சி.ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...