கல்லூரி மாணவியை ஏமாற்றி 9 சவரன் நகை, ரொக்கத்தை மோசடி செய்த இளம்பெண் கைது

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னகுருசாமியின் மகள் உமாதேவி(20). இப்பகுதியில் தனியார் கல்லூரியில் பி.ஏ.2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
Updated on
1 min read

அருப்புக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம் குடும்ப பிரச்னையை தீர்ப்பதாக கூறி 9 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.17 ஆயிரம் ஆகியவைகளை மோசடி செய்த இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னகுருசாமியின் மகள் உமாதேவி(20). இப்பகுதியில் தனியார் கல்லூரியில் பி.ஏ.2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். வீட்டில் பிரச்னையாக இருப்பதாகவும் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். குடும்ப கஷ்டத்தை தீர்ப்பதற்கு எந்திர தகடை வீட்டில் மாட்டி வைத்தால் பிரச்னைகள் தீரும் என  தெரிவித்துள்ளனர். இதை உண்மையென நம்பிய உமாதேவி குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பிரச்னைகள் குறித்து பேசியுள்ளார்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அப்பெண், கடந்த மாதம் 23-ம் தேதி உமாதேவி வீட்டிற்கு வந்தாராம். அங்கு வந்த இளம்பெண்ணிடம் குடும்ப சூழ்நிலை குறித்து தெரிவித்தாராம். இதை தீர்ப்பதற்கு அதிகம் செலவாகும் என ஜோசியம் பார்க்கும் பெண் கூறினாராம். எனவே உண்மையென கருதிய உமாதேவி தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 9 சவரன் நகை மற்றும் ரூ.17 ஆயிரம் ரொக்கத்தையும் எடுத்துக் கொடுத்துள்ளார். அதையடுத்து, இது குறித்து எதுவும் தெரியாதது போல் இருந்துள்ளார்.

இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் வைத்திருந்த பணம், நகை ஆகியவைகளை சின்னகுருசாமி தேடினாராம். அப்போது, காணாதது குறித்து மகளிடம் கேட்ட போது, நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். எனவே தனது மகளை ஏமாற்றி நகை மற்றும் ரொக்கத்தை மோசடி செய்த இளம்பெண் குறித்து சின்னகுருசாமி அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையில் புகார் செய்தார். அதன் பேரில்  ஜோசியம் பெண் மீது வழக்கு பதிவு செய்தனர். அதையடுத்து, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது போடிநாயக்கனூர் நாயக்கர் தெருவைச் சேர்ந்த கார்த்திக்கின் மனைவி ராஜேஸ்வரி(25) என்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து மோசடி செய்தது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com