பி.எஸ்.என்.எல் 3ஜி டேட்டா கட்டணம் பாதியாக குறைத்து நடவடிக்கை

அதேபோல், வருடாந்திர வாடகை திட்டத்தில் உள்ள அனைவரும் அகன்ற அலைவரிசை வாடிக்கையாளர்கள் ரூ.600ம், அதற்கு மேல் மாத வாடகை திட்டத்தில் உள்ளோர் அனைவருக்கும் சலுகை விலையில் 3ஜி டேட்டா
Updated on
1 min read

பி.எஸ்.என்.எஸ் நிறுவனம் சார்பில் 67-சுதந்திர தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் 3 ஜி டேட்டா கட்டணம் பகுதியாக குறைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் 3 ஜி டேட்டா கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே புதிய கட்டணப்படி 1 ஜி.பி ரீசார்ஜ் செய்வதற்கு ரூ.139ம், 2 ஜி.பிக்கு ரூ.251ம், 5 ஜி.பிக்கு ரூ.561ம் மற்றும் 10 ஜி.பி ரூ.1011-க்க்கும் கிடைக்கும். இந்த கட்டணக்குறைப்பு போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். மேலும், 2ஜி மற்றும் 3ஜி திட்டத்திற்கு பொதுவானதாகும்.

அதேபோல், வருடாந்திர வாடகை திட்டத்தில் உள்ள அனைவரும் அகன்ற அலைவரிசை வாடிக்கையாளர்கள் ரூ.600ம், அதற்கு மேல் மாத வாடகை திட்டத்தில் உள்ளோர் அனைவருக்கும் சலுகை விலையில் 3ஜி டேட்டா கார்டு வழங்கப்படுகிறது. அதோடு, இந்நிறுவனம் விழாக்கால சலுகையாக கூடுதல் மதிப்புடைய காம்போ டாப்-அப் ரூ.222, ரூ.555 மற்றும் ரூ.786 ரீசார்ஜ்களையும் அறிமுகம் செய்துள்ளது.

இந்த நிறுவனம் இரண்டு கட்டண ரீசார்ஜ்களான ரூ.5 மற்றும் ரூ.69 ஐ பயன்படுத்தி 1 நாள் மற்றும் 30 நாள்கள் வரையில் ரோமிங்கில் அனைத்து இன்கமிங் அழைப்புகளையும் இலவசமாக பெறலாம். எனவே பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சேவைகள் மற்றும் கட்டணத்திட்டம் பற்றிய முழு விவரத்தையும்  www.tamilvadu.bsnl.co.in என்ற இணைய தள முகவரியில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com