வீரததுறவி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி ரதயாத்திரை விருதுநகருக்கு வந்ததை அடுத்து கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் விவேகானந்தர் வேடமணிந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
விவேகானந்தரின் சிலை உருவம் தாங்கிய ரதயாத்திரை விருதுநகருக்கு புதன்கிழமை சாரதா வித்யாலயா மேல்நிலைப்பள்ளிக்கு வந்ததடைந்து. அங்கு ரத பொறுப்பாளர்கள் ஜெயகாந்தன், சுந்தர் ஆகியோர் வரவேற்றனர். அதையடுத்து, இப்பகுதியில் முக்கிய கல்லூரி மற்றும் பள்ளிகளுக்குச் சென்ற நிலையில் மாணவ, மாணவிகள் சிறப்பான வரவேற்பளித்தனர்.
அதையடுத்து, விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளிக்கு மாலையில் வந்தடைந்தது. இதை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன், சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டியராஜன் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்று மாலை அணிவித்து மரியாதை செய்து, ரதயாத்திரையுடன் மாணவர்கள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில், பள்ளி மாணவர்கள் விவேகானந்தரின் வேடமணிந்து கச்சேரி சாலை, பழைய பேருந்து நிலையம், சிவகாசி சாலை, சாத்தூர் சாலையில் கே.வி.எஸ்.பெண்கள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைவந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து அருப்புக்கோட்டைக்கு செல்வதற்கு வழியனுப்பி வைத்தனர். இதில் விருதுநகரில் உள்ள வணிகர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று ரதயாத்திரையை வரவேற்று மரியாதை செய்தனர்.
இந்த ரதயாத்திரை தமிழகம் முழுவதும் வீரத்துறவி விவேகானந்தரின் புகழை பரப்பும் வகையில் ஏப் 13-ம் தேதி கோவையில் தொடங்கியது. இந்த யாத்திரை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜன.12-ம் தேதி முடிய உள்ளதாக உடன் வந்த குழுவினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.