விருதுநதர் மாவட்டத்தில் முதல் தாள் ஆசிரியர் தகுதி தேர்வில் 9424 பேர் பங்கேற்றனர்

இம்மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள 22 தேர்வு மையங்களில் முதல் தாள் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது. இத்தேர்வில்
விருதுநதர் மாவட்டத்தில் முதல் தாள் ஆசிரியர் தகுதி தேர்வில் 9424 பேர் பங்கேற்றனர்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலம் நடத்தப்படும் முதல் தாள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 9424 பேர்கள் வரையில் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.

இம்மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள 22 தேர்வு மையங்களில் முதல் தாள் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்பதற்கு மொத்தம் 9586 பேர் வரையில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அதில், 9424 பேர்கள் மட்டும் கலந்து கொண்ட நிலையில், 162 பேர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.

இத்தேர்வு நடந்த மையங்களில் பொறுப்பாளர் தொழில் கல்வி இணை இயக்குநர் தர்மராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், கூடுதல் தொடக்க கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் தலைமையில் ஒவ்வொரு தேர்வு மையங்களில் நேரில் சென்று கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இது குறித்து முதல் தாள் தேர்வில் பங்கேற்ற விருதுநகரைச் சேர்ந்த முகமது கூறியதாவது: இதில் 1-வது வகுப்பு முதல் 10-வது வகுப்பு வரையிலான சமச்சீர் பாடத்திட்டங்களில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. ஆங்கிலம் பாடம் மிகவும் கடினமாக இருந்தது. அதேபோல், தமிழ் பாடத்தில் இலக்கணத்திலிருந்து அணிகள் உள்ளிட்ட மேல் பகுதியிலிருந்து தான் கேள்விகள் கேட்கப்படும்.

இத்தேர்வில் யோசித்து பதில் கூறுவது போல் உள் பகுதியிலிருந்து வினைச்சொல் மற்றும் இடைச்சொல் போனறவைகளும், புலவர்கள் வாழ்ந்த காலங்கள் குறிப்பிட்டும் கேட்கப்பட்டிருந்தது. இதுபோன்ற யாரும் எதிர்பார்க்காத கேள்விகள் இடம் பெற்றிருந்ததாக குறிப்பிட்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com