

விருதுநகர் அருகே தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் கூலி குறைவாக வழங்குவதை கண்டித்து தொழிலாளர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆவுடையாபுரத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் வாறுகால் தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்றும் வழக்கம் போல் ஈடுபட்டிருந்த நிலையில் தொழிலாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் குறைந்த அளவு கூலியாக ரூ.35 வழங்கி வருகின்றனர். அதேபோல், பதிவேடுகளில் கூடுதலாகவும் பதிவு செய்வதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இந்தக் கூலியை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது.மேலும், பக்கத்து ஊராட்சிகளில் ரூ.70, முதல் ரூ.80 வரையில் நாள்தோறும் கூலியாக வழங்கப்படுகிறது. இங்குதான் குறைவாக வழங்கப்பட்டு வருவதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஆவுடையாபுரம் ஊராட்சி தலைவர் சம்சம்மாள்பிவீ ஆகியோர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அரசு விதிமுறைப்படி அளந்து கொடுத்து வேலை செய்தால் தான் முழுக் கூலி என்றும், இல்லையென்றால் வேலை செய்கிற அளவிற்கு கூலி வழங்கப்படும் என்றும் தொழிலாளர்களிடம் விரிவாக எடுத்துரைத்தனர். இனிமேல் உங்களுக்கான கூலியை ஊராட்சி அலுவலகம் மூலம் வங்கிகளில் தொழிலாளர்கள் கணக்கி்ல் விடுவிக்கப்பட்டிருப்பதாக கூறிய பின்னர் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.