அருப்புக்கோட்டை அருகே வாகன விபத்தில் தொழிலதிபர் சாவு: 4 பேர் படுகாயம்

சென்னை அருகே குன்றத்தூரைச் சேர்ந்தவர் பொன்னுபாண்டியன்(45). இவர் மரக்கடை தொழிலதிபராக இருந்து வருகிறார். இவர் மனைவி சக்தி(40), மகள்கள் கவுசிகா(17), மன்சிகா(17) ஆகியோருடன் தூத்துக்குடி
Updated on
1 min read

அருப்புக்கோட்டை அருகே முன்புறம் சென்ற லாரி மீது வாகனம் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த மரக்கடை தொழிலதிபர் உயிரிழந்தார். மேலும், இவரது மனைவி மற்றும் மகள்கள் உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை அருகே குன்றத்தூரைச் சேர்ந்தவர் பொன்னுபாண்டியன்(45). இவர் மரக்கடை தொழிலதிபராக இருந்து வருகிறார். இவர் மனைவி சக்தி(40), மகள்கள் கவுசிகா(17), மன்சிகா(17) ஆகியோருடன் தூத்துக்குடி அருகே ஜக்கம்மாள்புரத்திற்கு குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக காரில் திங்கள்கிழமை இரவு சென்னையில் புறப்பட்டனர்.  இக்காரை சென்னைப் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் அன்பழகன்(24) என்பவர் ஓட்டினாராம். அருப்புக்கோட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அருகே வரும் போது முன்புறம் சென்ற கண்டெய்னர் லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதியது. இதில், காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்து முன்புறம் அமர்ந்திருந்த பொன்னுப்பாண்டியன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் அவரது மனைவி, மகள்கள் மற்றும் கார் டிரைவர் உள்ளிட்ட 4 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீஸார் காயம் அடைந்தவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பொன்னுப்பாண்டியன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com