கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக கூறி மெட்ரிக்குலேசன் பள்ளியை பெற்றோர் குழந்தைகளுடன் முற்றுகை

அருப்புக்கோட்டை சௌந்தரபாண்டியன் காலனியைச் சேர்ந்தவர் இளம்பூரணம்-உஷாராணி தம்பதியர் மகன்களான கணேஷ்பிரவு(11), கோமேஷ்வர்(7). இவர்கள் இருவரும் இப்பகுதியில் உள்ள கே.எஸ்.எஸ்.
Updated on
2 min read

அருப்புக்கோட்டையில் கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக கூறி மெட்ரிக்குலேசன் பள்ளியின் முன்பு ஒரு பெற்றோர் குழந்தைகளுடன் இன்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அருப்புக்கோட்டை சௌந்தரபாண்டியன் காலனியைச் சேர்ந்தவர் இளம்பூரணம்-உஷாராணி தம்பதியர் மகன்களான கணேஷ்பிரவு(11), கோமேஷ்வர்(7). இவர்கள் இருவரும் இப்பகுதியில் உள்ள கே.எஸ்.எஸ்.என்.தியாகராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கணேஷ்பிரவு 7-வகுப்பும், கோமேஷ்வர் இரண்டாவது வகுப்பும் படித்தும் வருகின்றனர்.இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் தம்பதியர் பணம் கட்டுவதற்காக கடந்த ஜூலை மாதம் சென்றுள்ளனர். அப்போது, அரசு நிர்ணயித்த கட்டணம் ஆண்டுக்கு ரூ.5500 விட கூடுதலாக ரூ.7500 வசூல் செய்து வந்தார்களாம். மேலும், பெற்றுக் கொண்ட பணத்திற்கு உடனே ரசீது வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். இது தொடர்பாக மெட்ரிக்குலேசன் கல்வி ஆய்வாளர் அலுவலகத்திற்கு புகார் செய்தார். அங்கு அலுவலர்கள் ரசீதுடன் புகார் செய்தால் தான் ஏற்றுக் கொள்வோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பள்ளிக் கட்டணத்தை அஞ்சல் வழியாக குறிப்பிட்ட தொகையை  செலுத்தியுள்ளார். பின்னர் 19-ம் தேதி பள்ளிக்கு நேராகச் சென்று தம்பதியர் இருவரும் பள்ளியின் செயலாளர் சௌந்தரபாண்டியன் மற்றும் தலைமையாசிரியிடம் கேட்டுள்ளனர். அதற்கு நிர்வாகத்தினர் ரசீது தர மறுத்ததை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து வெளியே செல்லும் படி கூறுகின்றனர். இது தொடர்பாக பள்ளியின் செயலாளர் சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகத்தினர் தங்களை தாக்கியதாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் தம்பதியர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், கணவர் இளம்பூரணத்தை மட்டும் கைது செய்து 5 நாள்கள் வரையில் சிறையில் அடைத்தனர். தற்போது, ஜாமீன் அடிப்படையில் வந்து காவல் நிலையத்தில் காலை, மாலையிலும் கையொப்பம் இட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களது மகன்களை நாள்தோறும் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், பள்ளியின் உள்ளே செல்ல அனுமதி மறுத்து பாதுகாவலர் இந்த மாணவர்களை வெளியே அனுப்பி விடுவதுமாகவே இருந்துள்ளனர். எனவே இதைக் கண்டித்து பெற்றோர் குழந்தைகளுடன் பள்ளியின் முன்பு முற்றுகையிட்டு அமர்ந்தனர்.இது குறித்து உஷாராணி கூறுகையில், நான் தினந்தோறும் எனது பிள்ளைகளை அனுப்பி வைத்தேன். கடந்த ஒரு மாதமாகவே பள்ளியில் சேர்க்காமல் வீட்டிற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இதனால், 1 மாத படிப்பு வீனாகி போனதாக தெரிவித்தார்.

 இது தொடர்பாக பள்ளியின் செயலாளர் சௌந்தரபாண்டியன் கூறியதாவது: பள்ளியின் மீது தேவையில்லாமல் புகார் செய்து வருகிறார். அதேபோல், இவர்களின் பிள்ளைகளும் கடந்த ஒருமாதமாகவே பள்ளிக்கு வரவில்லை. இருந்தும் எங்களது உறவின் முறையினர் பள்ளியில் சேர்க்க வேண்டாம் என தெரிவித்துள்ளதாக மட்டும் தெரிவித்தார்.

இச்சம்பவம் அறிந்த மெட்ரிக்குலேசன் பள்ளி ஆய்வாளர் விஜயராணி,  அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் உதயகுமார் மற்றும் வட்டாட்சியர் சந்திரசேகரன் ஆகியோர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்துவதற்கு முன்வழியாக சென்றவர்கள். திரும்பிச் செல்லும் போது வேறு கார் மூலமாக சென்றனர்.ஆனால், பாதிக்கப்பட்டோரிடம் எந்த அதிகாரியும் சந்தித்து குறைகளை கேட்கவில்லை. அதனால், காலையில் 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் அமர்ந்திருந்தவர்கள் மாலையில் பெற்றோர் குழந்தைகளுடன் வீட்டுக்குச் திரும்பிச் சென்றனர். அதோடு, கடைசி வரையில் அதிகாரிகளும் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமலே சென்றனர். கைப்பேசியில் தொடர்பு கொண்டாலும் அதிகாரிகள் பதில் கூறுவதற்கு முன்வரவில்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com