தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுக்காக அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுக்கான அனைத்து துறை அதிகாரிகளுடனான கல்நதாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுக்காக அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுக்கான அனைத்து துறை அதிகாரிகளுடனான கல்நதாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசியதாவது:

இந்த மாவட்டத்தில் குரூப்-4 தேர்வில் மொத்தம் 54223 பேர்கள் பங்கேற்க உள்ளனர். இத்தேர்வு விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் 119 தேர்வு மையங்களில் வருகிற 25-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், மர்ம நபர்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட இருக்கிறது.இத்தேர்வுக்காக வந்துள்ள வினாத்தாள்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் விருதுநகர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் திருச்சுழி ஆகிய சார்நிலைக் கருவூலங்களில் பாதுகாப்பாக வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்மையங்களில் 23-தேதி முதல் 25-ம் தேதி வரையில் ஆயுதமேந்திய போலீஸார் பாதுகாப்பு அளிக்க உள்ளனர். அதோடு, தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்படவும் உள்ளது.

தேர்வு நாளன்று தேர்வுக்கூட அறைகளுக்கு வினாத்தாள் மற்றும் ஆவணங்களை எடுத்துச் செல்வதற்காக 33 வாகனங்களில் ஆயுதமேந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதோடு, தேர்வுக்கூட அறைகளில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் வெப் கேமார பொறுத்தி தொடர்ந்து கணிப்பொறி மூலம் கண்காணிக்கப்பட இருக்கிறது. இம்மாவட்டத்தில் பதற்றமான தேர்வு மையங்களாக கண்டறியப்பட்டுள்ளவைகளுக்கு கூடுதலாக கேமார பொறுத்தி தொடர்ந்து கண்காணிக்கப்பட இருக்கிறது.மேலும், தேர்வு மையங்களின் கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் எளிதாக சென்று வரும் வகையில் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அருமைநாயகம் வரகுணராஜ் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com