5 ஆடுகளை விஷம் வைத்து கொன்றதாக 4 பேர் மீது வழக்கு

விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மர்(52). இவருக்கும் அருகில் குடியிருந்து வரும் ராஜா உள்ளிட்டோருக்கு ஆடுகள் மேய்ப்பதில் முன்விரோதம் இருந்து வருகிறது. எனவே இவருக்குச்
Updated on
1 min read

விருதுநகர் அருகே தொட்டியில் விஷம் கலந்த தண்ணீரை பருகிய 5 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மர்(52). இவருக்கும் அருகில் குடியிருந்து வரும் ராஜா உள்ளிட்டோருக்கு ஆடுகள் மேய்ப்பதில் முன்விரோதம் இருந்து வருகிறது. எனவே இவருக்குச் சொந்தமான 10 ஆடுகளை வியாழக்கிழமை வழக்கம் போல் ஆடுகளை காட்டுப் பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றாராம். பின்னர் மாலையில் தனது வீடு அருகே தொழுவத்தில் அடைத்துள்ளார்.

பின், இன்று காலையில் இரை போடுவதற்காக எழுந்து தொழுவத்திற்கு  வந்துள்ளார். அப்போது, தொட்டியில் வைத்திருந்த தண்ணீரை குடித்து விட்டு 5 ஆடுகள் உயிரிழந்தும், அதற்கு பக்கத்திலேயே 5 ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுத்திருந்தையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக தர்மர் ஆமத்தூர் காவல் நிலையத்தில் ராஜா, கருப்பையா, சுப்புராம் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் மீது புகார் செய்தார். அதன் பேரி்ல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com