கொல்லிமலையில் சாராயம் காய்ச்சியவர் கைது

கொல்லிமலையில் சாராயம் காய்ச்சிய கூலித்தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
Updated on
1 min read

கொல்லிமலையில் சாராயம் காய்ச்சிய கூலித்தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

கொல்லிமலை வழப்பூர் நாடு அருகே குட்டுக்கிராயப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர்(38) கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டில் 150 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்ததுடன், பிராந்தியுடன் 25 பாட்டில்கள் வைத்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள் உத்தரவின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் சபாபதி தலைமையில் அதிவிரைவுப்படையைச் சேர்ந்த 9 பேர் வழப்பூர் நாடு கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சந்திரசேகர் வீட்டில் இருந்த சாராய ஊறலை அழித்ததுடன், 25 பிராந்தி பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சந்திசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com