சிவகாசி அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க தமிழக அரசின் பங்களிப்பும் அவசியம்: அஜில்ரஞ்சன்சவுத்ரி

சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க தமிழக அரசின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே வாய்ப்பு உள்ளதாக மத்திய ரெயில்வே இணையமைச்சர் அஜில்ரஞ்சன்சவுத்ரி விருதுநகர் மக்களவை
Updated on
1 min read

சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க தமிழக அரசின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே வாய்ப்பு உள்ளதாக மத்திய ரெயில்வே இணையமைச்சர் அஜில்ரஞ்சன்சவுத்ரி விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரத்தில் உள்ள 427ம் எண் லெவல் கிராசிங்கில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை மனுவும் அளித்தனர். அதன் அடிப்படையில் எனது ஏற்பாட்டின் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதிகளில் ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதையடுத்து இதுவைரயில் மேம்பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படாமலே உள்ளது. இது தொடர்பாக நான் ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். அதையடுத்து, மக்களவையிலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி பேசியுள்ளேன். ஆனால், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய ரயில்வே இணையமைச்சர் அஜில்ரஞ்சன்சவுத்ரி, மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: தங்கள் தொகுதியில் சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு வலியுறுத்தியிருந்தீர்கள். இக்கோரிக்கை பற்றி ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கவனத்துடன் பரிசீலனை செய்தனர். அதன் அடிப்படையில் இக்கடிதத்தி்ல் தெரிவிக்க விரும்புகிறேன். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் லெவல் கிராமசிங் வழியாக கடந்த 2012-நவம்பர் மாதம் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் குறைந்த வாகனங்களே கடந்து சென்றுள்ளன.  குறைந்தபட்சம் 1 லட்சம் யூனிட் வாகனங்கள் கடந்து செல்ல வேண்டும். ஆனால், இந்த லெவல் கிராசிங் வழியாக 60 ஆயிரத்து 160 யூனிட் வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. ஆனாலும், இப்பகுதியில் உள்ள மக்கள் மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

எனவே சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மத்திய அரசு தயராகவே உள்ளது. ஆனால், தமிழக அரசின் நிதி பங்களிப்பு செய்தால் உடனடியாக அமைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், இதுவரையில் தமிழக அரசிடமிருந்து கருத்துரு எதுவும் வரவில்லை. அப்படி வநதால் உடனடியாக மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை தொடங்குவதற்கு உரிய ஏற்பாடு செய்வதாக மத்திய இணை அமைச்சர் அஜில்ரஞ்சன்சவுத்ரி, மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com