மதுரையில் தாயை கொலை செய்துவிட்டு மகன் தப்பி ஓட்டம்

மதுரை புதூரில் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிகொண்டிருந்த தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு மகன் தப்பி ஒட்டிவிட்டான்.
Updated on
1 min read

மதுரை புதூரில் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிகொண்டிருந்த தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு மகன் தப்பி ஒட்டிவிட்டான்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறியதாவது:- மதுரை புதூர் காந்திபுரம் மூன்றாவது தெருவைச்சேர்ந்த தே.மு.தி.க பிரமுகர் செல்வராஜ் என்பவரின் மனைவி தனலட்சுமி இவருக்கு வயது 40. இவர்களுக்கு 2 மகன்களுக்கு 1 மகள் உள்ளனர். இவர்களின் இளைய மகன் மணிகண்டனுக்கு திருமணம் ஆகவில்லை. இவர் எந்த வேலையும் செய்யாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் அடிக்கடி பணம் கேட்டு பெற்றோரிடம் சண்டைபோட்டுவந்துள்ளார். எனவே மணிகண்டனை தாய் தனலட்சுமி கண்டித்துள்ளார். இந்நிலையில் ஆந்திரம் அடைந்த மணிகண்டன் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிகொண்டிருந்த தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளான். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து மதுரை புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com