அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பாளையங்கோட்டையில் பெண் கொலை

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இவ் வளாகத்தில் புதிதாக ஒரு அறை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அப் பகுதியில் பிச்சையெடுக்கும் ஒரு பெண் வழக்கமாக

News image
Updated On :1 டிசம்பர் 2013, 11:59 am

முத்துகுமார்

பாளையங்கோட்டையில் பெண்ணை கொலை செய்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இவ் வளாகத்தில் புதிதாக ஒரு அறை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அப் பகுதியில் பிச்சையெடுக்கும் ஒரு பெண் வழக்கமாக இந்தக் கோவில் வளாகத்தில் இரவில் தூங்குவாராம்.இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்தப் பெண் இறந்துகிடந்தார். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் ராஜமன்னார், காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலில் பல்வேறு இடங்களிலும் காயங்கள் உள்ளன. குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.