சண்முகம் செட்டியார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

பண்ருட்டி ராஜாஜி சாலையில் வசித்தவர் சண்முகம் செட்டியார்.இவர் வீட்டிலேயே நகை அடகு கடை நடத்தி வந்தார். கடந்த 2011ம் ஆண்டில் அவர் வீட்டில் தூங்கிகொண்டிருந்தபோது, உள்ளே புகுந்த மர்ம
Updated on
1 min read

பண்ருட்டி ராஜாஜி சாலையில் வசித்தவர் சண்முகம் செட்டியார்.இவர் வீட்டிலேயே நகை அடகு கடை நடத்தி வந்தார். கடந்த 2011ம் ஆண்டில் அவர் வீட்டில் தூங்கிகொண்டிருந்தபோது, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அவரை கொலை செய்து, சுமார் 80 கிலோ மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை எடுத்துச் சென்றனர்.அதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் எனத் தெரிகிறது.

கொலை குற்றவாளிகளை பிடிக்க போலீஸார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து தேடினர். ஆனால் எந்த பலனுமில்லை.இந்நிலையில் சண்முகம் செட்டியார் மகன் சிபிசிஐடி விசாரணைக்கு கோரினார்.அதன் அடிப்படையில் இக்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சென்னையை சேர்ந்த வீடியோ பைரசி  கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி தலைமையில் 4 தனிபடைகள் அமைத்து நான்கு கோணங்களில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தகவல் அளிப்பவர்கள் விபரம் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் பரணிதரன் 9444014284,பாக்யமரிமளா துணைகண்கானிப்பளர் விழுப்புரம்-9443214182,04146-250180,250190 சென்னை டிஎஸ்பி பரணிகுமார்-9444009888

இந்த எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை அளிக்கலாம் என்று கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி செய்தியாளர்களிடம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com