செல்போனில் படம் எடுத்து பெண்ணை மிரட்டிய இருவர் மீது வழக்குப் பதிவு
சிதம்பரம் தேரடிப்பிள்ளையார் கோயில் தெருவை வசிக்கும் ரவிச்சந்திரன் மனைவி நீலா (43). இவர் சிதம்பரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி தனது மகள்


செல்போனில் ஆபாசபடம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக பெண்ணை மிரட்டி இருவர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சிதம்பரம் தேரடிப்பிள்ளையார் கோயில் தெருவை வசிக்கும் ரவிச்சந்திரன் மனைவி நீலா (43). இவர் சிதம்பரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி தனது மகள் அருணாவை அண்ணாமலைப் பல்கலையில் சேர்த்து பிஇ படிக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்கள் முன்பு பாலாஜி என்பவர் வேலைக்காரி செல்வியுடன் சேர்ந்து தன்னை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டும், அசிங்கமாக நிற்க வைத்து செல்போனில் படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்தார் என நீலா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் பாலாஜி, செல்வி ஆகிய இருவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...