மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் மீது பாலியல் புகார்: பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

சேலம் மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் மீது தினக்கூலி பெண் துப்புரவு பணியாளர்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். விசாரணையில் இக்குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட
Updated on
1 min read

சேலம் மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் மீது தினக்கூலி பெண் துப்புரவு பணியாளர்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். விசாரணையில் இக்குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட துப்புரவு மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சேலம் மாநகராட்சியின் சூரமங்கலம் மண்டலத்துக்கு உட்பட்ட 2வது வார்டில் 18 பெண்கள் உள்பட 28 பேர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வார்டில் துப்புரவு மேற்பார்வையாளராக 20வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் ரவீந்திரனின் சகோதரர் காந்தி பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தினக்கூலி பெண் துப்புரவுத் தொழிலாளிகள் 18 பேரும் சேலம் நகர காவல்நிலையத்தில் சனிக்கிழமை புகார் மனு அளித்தனர்.

துப்புரவு மேற்பார்வையாளர் காந்தி தங்களுக்கு பாலியல் ரீதியிலான தொல்லைகள் அளிப்பதாகவும், அதற்கு உடன்படாவிடில் பணியிலிருந்து நீக்கிவிடுவதால மிரட்டுவதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தனர். எனினும், புகாரை மனுவை ஏற்க மறுத்த போலீஸார், மாநகராட்சி ஊழியர்கள் சார்ந்த பிரச்னை என்பதால் முதலில் இப்புகார் மனுவை மாநகராட்சி ஆணையர் அளிக்கும்படியும், தொடர்ந்து அவர்கள் மூலமாக காவல்துறைக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவித்து அனுப்பினர்.

இதையடுத்து, பெண் துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு மேற்பார்வையாளர் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தின். அப்போது அவர்கள் கூறுகையில், துப்புரவு மேற்பார்வையாளர் காந்தி பெண் துப்புரவு தொழிலாளிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் அளிப்பது குறித்து ஏற்கனவே மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கச் சென்றோம் என்றனர்.

தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் எம்.அசோகன், பாதிக்கப்பட்ட பெண் துப்புரவு தொழிலாளிகளிடம் புகார் மனுவை பெற்றதுடன், இப்புகார் மீது விசாரணை நடத்திட நகர் நல அலுவலர் அர்ஜுன்குமாருக்கு பரிந்துரை செய்தார். இதனடிப்படை யில் நகர்நல அலுவலர் மேற்கொண்ட விசாரணையில், துப்புரவு மேற்பார்வையாளர் காந்தி பெண் துப்புரவு தொழிலாளிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்து ஆணையர் எம்.அசோகன் உத்தரவிட்டார். இதன்தொடர்ச்சியாக, காந்தி மீது காவல்துறை நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் சேலம் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com