தனியார் பள்ளியில் ரூ.15 ஆயிரம் திருட்டு

விருதுநகர் அருகே அம்மாபட்டி கிராமத்தில் தனியார் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் செயலாளராக இருந்து வருபவர் ஜான் மார்ட்டின்(45). இவர், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ரூ.15
Updated on
1 min read

விருதுநகர் தனியார் உயர் நிலைப்பள்ளியின் அறையை உடைத்து  ரூ.15 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் அருகே அம்மாபட்டி கிராமத்தில் தனியார் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் செயலாளராக இருந்து வருபவர் ஜான் மார்ட்டின்(45). இவர், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை அறையில் பீரோவில் வைத்து விட்டுச் சென்றாராம். இதையடுத்து வழக்கம் போல் திங்கள்கிழமை காலையில் பள்ளிக்கு வந்து பார்த்தாராம்.

அப்போது, அறையின் கொண்டியை நெம்பியும், அறையிலிருந்த பீரோவை கடப்பாறை கம்பியால் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதோடு, உள்ளே சென்று பார்க்கையில் பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக பள்ளியின் செயலாளர் ஜான்மார்ட்டின் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com