விருதுநகர் அருகே மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகை

விருதுநகர் அருகே பட்டம்புதூர்-மலைப்பட்டி சாலையில் உள்ள குப்பாம்பட்டியில் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த சுப்பம்மாள்(70) மற்றும் பாப்பம்மாள்(80) ஆகியோர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்களை விடுவிக்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் அருகே பட்டம்புதூர்-மலைப்பட்டி சாலையில் உள்ள குப்பாம்பட்டியில் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த சுப்பம்மாள்(70) மற்றும் பாப்பம்மாள்(80) ஆகியோர் வியாழக்கிழமை உயிரிழந்தனர். இந்நிலையில் அன்றைய நாளில் மாலையில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மயானத்தில் சடலத்தை அடக்கம் செய்து விட்டு திரும்புகையில் மதுக்குடித்து விட்டு பாட்டில்களை சாலையில் வீசியுள்ளனர். அப்போது, மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் அடக்கம் செய்வதற்கு செல்லும் போது சிலர் சாலையில் பாட்டில்கள் வீசுவதை கண்டித்தார்களாம். இதனால் ஆத்திரம் அடைந்த இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் கற்கள் வீசி தாக்கி மோதிக்கொண்டனர்.

இக்கல் வீச்சு சம்பவத்தில் இரு பிரிவைச் சேர்ந்த சுருளிப்பாண்டி(40), கருப்பசாமி(35), ராஜன் உள்ளிட்ட 7 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இரு பிரிவினரைச் சேர்ந்தவர்களும் விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். மேலும், பிரச்னை ஏற்படாமல் கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை 10 பேரை கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்தவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இக்கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்தி நிறுத்தினர்.

மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றனர். அதற்கு காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து கலைந்து சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com